யோகா

"உடல் நலத்தை காக்க யோகாவில் வழியுண்டு!
உள்ளத்தை இறைவனிடம் சேர்க்க இதில் முறையுண்டு!"

மனிதன் உடல் நலத்துடன் நீடுழி வாழவே விரும்புகிறான். அந்த நல்வாழ்விற்கான வழிமுறைகளை பண்டைக்காலம் முதல் சித்தர்கள் பயன்படுத்தி சிறந்த உடல் வளம், அறிவுக்கூர்மை மற்றும் புலனடக்கத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தனர்.

உடற்பயிற்சி தசைகளை உறுதிப்படுத்த உதவும். யோகப்பயிற்சி உடல்நலம், உள்ளத்தெளிவு, அறிவு வளர்ச்சி மற்றும் உள்ளுறுப்புகள் வலிவும், திறனும் உடையதாய் எப்போதும் இளமையுடனும் பொலிவுடனும் பாதுகாக்கும்.

யோகமும், தியானமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.

நமது இயக்கம் MODERN HEALTHY YOGA AND MEDITATION அமைப்புடன் இணைந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி யோகப் பயிற்சி அளித்து வருகிறது.

ஒரு மணி நேரப்பயிற்சி :

1. மூச்சுப்பயிற்சி
2. சூரியநமஸ்காரம்
3. தோப்புக்கரணம் ( SUPER BRAIN YOGA )
4. சாந்தியாசனம்

யோகா செய்யும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை:

1. யோகப் பயிற்சியின் பொது வயிறு காலியாக இருக்க வேண்டும்.
2. காற்றோட்டமான இடத்தில் திடமான மீது பயிற்சி செய்ய வேண்டும்.
3. நாள்தோறும் குறைந்த பட்சம் 15 நிமிடம் பயிற்சி செய்ய வேண்டும்.

உணவு முறை :

1. தினமும் இரவில் கருப்பு கொண்டக்கடலை பத்து எடுத்து ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு நல்ல புரதச்சத்து கிடைக்கும். 2. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மிக உயர்ந்த பொருளான நெல்லிக்கனியை வாரத்திற்கு 2 சாப்பிட அதிக சுறுசுறுப்பும் உடல் பொலிவும் உண்டாகும். 3. நினைவாற்றலை பெருக்கும் வல்லாரைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பயிற்சியின் முடிவில் நெல்லிக்கனி சாறு வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்வோம். பள்ளிகளில் நாம் அளிக்கும் பயிற்சிகள் காணொளிகளாக இங்கே பார்க்கலாம்.

"பிறர் உயர்வுக்கு இறை நினைப்போடு பாடுபடுங்கள்,
உங்கள் உயர்வுக்கு பகவான் கைகொடுப்பார்!"