கூட்டுப்பிரார்த்தனை

நல்லது செய்ய வாய்ப்புக் கொடுக்குமாறு பகவானிடம் வேண்டுபவரே மனிதரில் நல்லவர். அப்படி நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்தவுடன் அதை சிறப்பாகச் செய்ய பகவானிடம் வேண்டிக் கொண்டு விறுவிறுப்பாக செயல்படுபவர்களே மனிதர்களில் உயர்ந்தவர். எவ்வளவு எதிர்ப்பும் இடற்பாடுகளும் வந்தாலும் தான் செய்யும் சமூகச் சேவையை தளராது செய்பவரே மனிதரில் புனிதமானவர். இவரே இறைத்தொண்டர். இத்தொண்டரை நோக்கி வந்த பிரச்சனைகள் யாவும், உணர்வுப் பூர்வமாகப் பக்குவப்படுத்த வந்தவைகளே ஆகும்.

இந்து ஒருங்கிணைப்பு மேம்பாட்டு இயக்கம் மற்றும் இந்து இளைஞர்கள் ஆன்மிக சேவா சங்கத்தின் இறைத் தொண்டர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தினந்தோறும் பிரம்ம மூகூர்த்தத்தில் 260 திருத்தொண்டர்கள் கொண்ட குழு அமைத்து பல்வேறு இடங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகிறது. மேலும், இயக்கத்திற்கு பொருள் உதவி செய்தவர்கள், திருத்தொண்டர்களுக்கு அன்னதானம் செய்பவர்கள் மற்றும் இறை வாசக பிரதி அச்சடித்துக் கொடுத்தவர்களுக்காவும் பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. பெயர் பதிவு செய்த மாணவ மாணவிகளுக்கு நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும், நல்லொழுக்கமும், கல்வியில் நல்ல ஆர்வமும் கொண்டு பிற்காலத்தில் நல்ல வேலையில் சிறந்து விளங்க வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பிரச்சனைகள் தீர வேண்டி முன்பதிவு செய்து கொண்ட பொது மக்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையின் போது தனித்தனியாக பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பு: ஒவ்வொரு குடும்பத்திலும் காலை அல்லது மாலையில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு பதினைந்து நிமிடம் தனக்கு பிடித்த கோயிலை உள்ளத்தில் நினைத்து இறை மந்திரம் கூறி மானசீகமாக பூஜை செய்து கூட்டாக பகவானிடம் வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் பிரச்சனை தீரும், காரியம் வெற்றியாகும்.

• மாணவர்கள் கல்விக்காக பிரார்த்தனை
• திருமணம் தாமதிக்கின்ற காரணத்திற்காக பிரார்த்தனை
• இல்வாழ்க்கை சிறக்க பிரார்த்தனை
• குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை
• நோய்கள் நீங்கி உடல் நலம் தேற பிரார்த்தனை
• கடன் பிரச்சனை தீர பிரார்த்தனை
• தொழில் துவங்க, தொழில் முன்னேற்றம் பெற பிரார்தனை
• குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க பிரார்த்தனை
• குழந்தைகள் நலம் பெற பிரார்த்தனை
• மங்கள பிரார்த்தனை அதாவது இறந்தவர்கள் ஆத்மாவிற்காக பிரார்த்தனை
• வேலை தேடுபவர்களுக்காக பிரார்த்தனை

நாள்தோறும் நடக்கும் கூட்டுப்பிரார்த்தனையில் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் : + 91 86800 82425